/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் சிறுவர்கள் வாகனம் ஓட்டி 3 மாதங்களில் 10 விபத்து; 6 பேர் மரணம்

ADDED : ஏப் 11, 2025 01:27 AM

கோவை:'சிறுவர்கள் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தினால், பெற்றோர் அல்லது வாகன உரிமையாளர் சிறையில் அடைக்கப்படுவர்' என, போலீசார் எச்சரித்துள்ளனர்.
சமீப நாட்களாக சிறுவர்கள் ஓட்டும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் விபத்துக்களில் சிக்குவது தொடர்கதையாக உள்ளது. இதை தவிர்க்க, '18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் வாகனம் ஓட்டி பிடிபட்டால், பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்யப்படும்; சிறுவர்கள் ஓட்டும் வாகனங்கள் விபத்தில் சிக்கினால் பெற்றோர் சிறையில் அடைக்கப்படுவர்' என, போலீசார் எச்சரித்துள்ளனர்.இருப்பினும், சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதும், விபத்து நடப்பதும் அதிகரித்து வருகிறது. கோவையில் மூன்று மாதங்களில், சிறுவர்கள் ஓட்டிய 10 வாகனங்கள் விபத்தில் சிக்கி, 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் கூறுகையில், ''பல சிறுவர்கள் இரு சக்கர வாகனங்களை இயக்குவதை பார்க்க முடிகிறது.
''போலீசார் சார்பில் பெற்றோரை அழைத்து, சிறுவர்களிடம் வாகனங்கள் கொடுக்கக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் வாகனங்கள் ஓட்டினால் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.