/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பா.ஜ., வடக்கு மாவட்ட தலைவர் பதவிக்கு 10 பேர் போட்டி
/
பா.ஜ., வடக்கு மாவட்ட தலைவர் பதவிக்கு 10 பேர் போட்டி
பா.ஜ., வடக்கு மாவட்ட தலைவர் பதவிக்கு 10 பேர் போட்டி
பா.ஜ., வடக்கு மாவட்ட தலைவர் பதவிக்கு 10 பேர் போட்டி
ADDED : ஜன 07, 2025 02:14 AM
அன்னுார், ; பா.ஜ., கோவை வடக்கு மாவட்ட தலைவர் தேர்தலில் கருத்து கேட்பு கூட்டம் அன்னுாரில் நடந்தது. தலைவர் பதவியை கைப்பற்ற பத்து பேர் போட்டியில் உள்ளனர்.
தமிழக பா.ஜ.,வில் முதல் கட்டமாக, கிளை நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. கிளை நிர்வாகிகள் பட்டியல் இதற்கான செயலியில் பதிவேற்றப்பட்டு வருகிறது. அடுத்த கட்டமாக, ஒன்றிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்று வருகிறது.
மாவட்ட அளவில், பதிவு பெற்ற 50 சதவீதம் ஒன்றியங்கள் உள்ள மாவட்டங்களில் மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் நடக்கிறது. கோவை வடக்கு மாவட்டத்தில், அவிநாசி, மேட்டுப்பாளையம், சூலூர் ஆகிய மூன்று தொகுதிகளில், 21 ஒன்றியங்கள் உள்ளன. கோவை வடக்கு மாவட்ட தலைவரை தேர்ந்தெடுக்க, கருத்து கேட்பு கூட்டம் அன்னுார் யூ.ஜி., மஹாலில் நேற்றுமுன்தினம் நடந்தது. தேர்தல் அதிகாரியாக, மாநில நிர்வாகி சக்கரவர்த்தி, பார்வையாளராக நந்தகுமார், மாவட்ட தேர்தல் அதிகாரியாக முரளி பணியாற்றினர்.
இதில் கோவை வடக்கு மாவட்டத்தை சேர்ந்த ஒன்றிய தலைவர்கள், மாவட்ட, மாநில நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என வாக்களிக்க தகுதி பெற்ற 47 பேரில், 45 பேர் வாக்களித்தனர்.
ஒவ்வொருவரும் மூன்று நபர்களை படிவத்தில் பரிந்துரைக்க வேண்டும். கருத்து கேட்பு படிவத்தில், நீங்கள் பரிந்துரைக்கும் நபரின் சிறப்பு என்ன, ஏன் அவரை தலைவராக பரிந்துரைக்கிறீர்கள் என கேட்கப்பட்டிருந்தது. நிர்வாகிகள் வாக்களித்த பின்பு, தேர்தல் அதிகாரிகள், கருத்து கேட்பு படிவங்கள் அடங்கிய பெட்டிக்கு, சீல் வைத்தனர். இந்த பெட்டி சென்னைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
கோவை வடக்கு மாவட்ட தலைவர் பதவியை கைப்பற்ற, தற்போதைய மாவட்ட தலைவர் சங்கீதா, பொதுச்செயலாளர் சத்தியமூர்த்தி, துணை தலைவர் விக்னேஷ், மாநில செயற்குழு உறுப்பினர் சதீஷ்குமார், நீலகிரி தொகுதி இணை பொறுப்பாளர் கதிர்வேல், சண்முகம், செந்தில்குமார், கோபால்சாமி, மனோன்மணி, சாமிநாதன் என பத்து பேர் ஆதரவு திரட்டினர்.