/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அறநிலையத்துறை சார்பில் 10 ஜோடிகளுக்கு திருமணம்
/
அறநிலையத்துறை சார்பில் 10 ஜோடிகளுக்கு திருமணம்
ADDED : அக் 21, 2024 11:26 PM

பொள்ளாச்சி : பொள்ளாச்சியில், ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், 10 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது.
ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சட்டசபையில் வெளியிட்ட அறிவிப்பின்படி, பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு கோவில்கள் சார்பாக, நான்கு கிராம் தங்க தாலி உள்ளிட்ட சீர் வரிசைகள் வழங்கி, திருமண விழா நடத்தப்படுகிறது.
கோவை இணை ஆணையர் மண்டலத்தில் உள்ள பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், 10 ஜோடிகளுக்கு திருமண விழா நேற்று நடந்தது.ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் இந்திரா, ஆய்வர் பாக்யலட்சுமி, செயல் அலுவலர்கள் சீனிவாச சம்பத், கந்தசாமி, தமிழ்செல்வன், தேவிப்பிரியா, ராமகிருஷ்ணன், கதிரவன் மற்றும் மணமக்களின் உறவினர்கள் பங்கேற்றனர்.
அதிகாரிகள் கூறுகையில்,'முதல்வரின் வழிகாட்டுதலின்படி, ஹிந்துசமய அறநிலையத்துறை அமைச்சர், சட்டசபையில் அறிவிப்பின்படி திருமணம் நடத்தப்பட்டது. அதில், நான்கு கிராம் தங்க தாலி, மெத்தை, கட்டில், வேட்டி, சேலை உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் என மொத்தம், 28 சீர்வரிசைகள் வழங்கப்பட்டது,' என்றனர்.

