/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கேரளாவுக்கு கடத்திய 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்- 3 பேர் கைது; 5 பேர் தலைமறைவு
/
கேரளாவுக்கு கடத்திய 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்- 3 பேர் கைது; 5 பேர் தலைமறைவு
கேரளாவுக்கு கடத்திய 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்- 3 பேர் கைது; 5 பேர் தலைமறைவு
கேரளாவுக்கு கடத்திய 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்- 3 பேர் கைது; 5 பேர் தலைமறைவு
ADDED : ஜன 20, 2025 10:58 PM
பொள்ளாச்சி; கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்திய மூன்று பேரை கைது செய்த பொள்ளாச்சி குடிமைப்பொருள் போலீசார், ஐந்து பேரை தேடி வருகின்றனர்.
பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார், கோவை - குனியமுத்துார் - இடையார்பாளையம் செல்லும் ரோட்டில், ஊருக்கு ஒதுக்குப்புறமாக கறிவேப்பிலை தோட்டம் அருகே, ரேஷன் அரிசி கடத்தல் சம்பந்தமாக கண்காணிப்பு மேற்கொண்டனர்.
அப்போது, கோவை -- செட்டிபாளையம் ரோடு அவ்வை நகரை சேர்ந்த காஜாமைதீன், 45, கோவை வெள்ளலுாரை சேர்ந்த சுரேஷ்,45, கேரளா மாநிலம் பாலக்காடு புதுச்சேரி வாளையாரை சேர்ந்த பாக்கியராஜ் ஆகியோர் கூட்டாக சேர்ந்து, மூன்று இருசக்கர வாகனங்களில், முறைகேடான முறையில், 2,625 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, இருவரை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள பாக்கியராஜை தேடி வருகின்றனர்.
கோவை, ஆத்துப்பாலம் - மதுக்கரை ரோடு -குனியமுத்துார் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டடனர். கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்த மதன் தினேஷ், கேரளா மாநிலம் எர்ணாகுளம் மூவாட்டுபுழா, பேரிக்காப்புள்ளி பொன்னகுடி ஹவுைஸ சேர்ந்த ஐசல்,34, அவரது நண்பர் கீழ்வெட்டு ஹவுைஸ சேர்ந்த சனுாப் ஆகியோர் சரக்கு வாகனத்தில், 3,500 கிலோ ரேஷன் அரிசி கடத்தியதை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, ரேஷன் அரிசி மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், ஐசலை கைது செய்து, தலைமறைவாக உள்ள மதன் தினேஷ், சனுாப் ஆகியோரை தேடி வருகின்றனர்.
பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டி செந்துார் கார்டன் சிட்டி அருகே கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, ஜமீன் ஊத்துக்குளி குஞ்சிபாளையத்தை சேர்ந்த நவீன் என்கிற நாகராஜ், ஜமீன் ஊத்துக்குளி அரண்மனை வீதியை சேர்ந்த கனகராஜ் ஆகியோர் கூட்டாக சேர்ந்து ரேஷன் அரிசி கடத்துவதாக தகவல் கிடைத்தது.
அங்கு, இருசக்கர வாகனத்தில் முறைகேடான முறையில் சேகரித்த, நான்காயிரம் கிலோ ரேஷன் அரிசியை, கனகராஜ்க்கு சொந்தமான சரக்கு வானகத்தில் லோடு ஏற்றி கேரளாவுக்கு கடத்திய போது பறிமுதல் செய்தனர். தலைமறைவான இருவரையும் தேடுகின்றனர்.
இந்த மூன்று வழக்குகளில், மொத்தம், 10,125 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள ஐந்து பேரை போலீசார் தேடுகின்றனர்.