/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெட்டப்படும் மரங்களுக்கு ஈடாக l1,000 மரக்கன்றுகள் நட்டாச்சு... துளிர்க்குது பசுமை!
/
வெட்டப்படும் மரங்களுக்கு ஈடாக l1,000 மரக்கன்றுகள் நட்டாச்சு... துளிர்க்குது பசுமை!
வெட்டப்படும் மரங்களுக்கு ஈடாக l1,000 மரக்கன்றுகள் நட்டாச்சு... துளிர்க்குது பசுமை!
வெட்டப்படும் மரங்களுக்கு ஈடாக l1,000 மரக்கன்றுகள் நட்டாச்சு... துளிர்க்குது பசுமை!
ADDED : டிச 07, 2024 05:59 AM

மேட்டுப்பாளையம் ; அவிநாசியில் இருந்து மேட்டுப்பாளையம் வரை உள்ள இருவழிச் சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட உள்ளது.
இதனால் சாலையின் இருபக்கம் உள்ள 800க்கும் மேற்பட்ட புளிய மரங்கள் வெட்டப்பட உள்ளன. இதற்கு ஈடாக 3 ஆயிரம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, முதல் கட்டமாக 1000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
மேட்டுப்பாளையத்தில் இருந்து அன்னுார் வழியாக அவிநாசி வரை உள்ள சாலை, மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு உட்பட்டதாகும். சேலம், ஈரோடு, திருச்சி, கரூர், திண்டுக்கல், திருப்பூர், உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள், அவிநாசி, அனனுார், மேட்டுப்பாளையம் சாலை வழியாக ஊட்டிக்கு செல்கின்றனர். இதுதவிர உள்ளூர் மக்களும் அதிக அளவில் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர். இந்த சாலை வழியாக தினமும் 4,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. அவிநாசியில் இருந்து மேட்டுப்பாளையம் வரை 35 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள இந்த சாலையை, நான்கு வழி சாலையாக தரம் உயர்த்தி, தமிழக அரசு அறிவித்தது. கோவை கோட்ட மாநில நெடுஞ்சாலை துறை சார்பில், விரைவில் அதற்கான பணிகள் துவங்க உள்ளன.
இந்த சாலை விரிவாக்க பணிகளுக்காக, 800-க்கும் மேற்பட்ட புளிய மரங்கள் வெட்டப்பட உள்ளன. இந்த மரங்களுக்கு ஈடாக புதிதாக மரக்கன்றுகளை நட மாநில நெடுஞ்சாலை துறையினர் முடிவு செய்தனர். முதல் கட்டமாக இச்சாலையில், காரமடை - சிறுமுகை, அன்னுார் - சிறுமுகை, இரும்பறை உள்ளிட்ட பகுதிகளில் வேம்பு, மகாகனி என பல்வேறு வகையிலான 1000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் உட்கோட்ட மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''மேட்டுப்பாளையம் அவிநாசி இடையிலான சாலை பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளன. இதில் வெட்டப்படும் மரங்களுக்கு ஈடாக, சுமார் 3,000 மரக்கன்றுகள் நட முடிவு செய்துள்ளோம். இதற்காக முதல் கட்டமாக காரமடை - சிறுமுகை, அன்னுார் - சிறுமுகை, இரும்பறை உள்ளிட்ட சாலைகளில் இதுவரை 1000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன, என்றார்.