/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெருமாள் கோவிலில் 100வது ஆண்டு அன்னதான விழா
/
பெருமாள் கோவிலில் 100வது ஆண்டு அன்னதான விழா
ADDED : அக் 21, 2024 04:31 AM
அன்னுார் : குன்னத்துார்புதுார் பெருமாள் கோவிலில், நுாறாவது ஆண்டு நினைவு நுழைவு வாயில் திறப்பு விழா நடந்தது.
குன்னத்துார் புதுாரில், நுாறு ஆண்டுகள் பழமையான ஸ்ரீதேவி, பூதேவி சமேதர, நாராயண மூர்த்தி பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில், ஆஞ்சநேயர், ராஜ கணபதி, விஷ்ணு, துர்க்கை சன்னதிகள் உள்ளன.
இக்கோவிலில் நுாறாவது ஆண்டாக அன்னதான விழா நடந்தது. நேற்று முன்தினம் சுதர்சன ஹோமம் நடந்தது. நூறாவது ஆண்டை முன்னிட்டு அமைக்கப்பட்ட நினைவு நுழைவு வாயில் திறப்பு விழா நடந்தது. ஊராட்சி தலைவர் கீதா தங்கராஜ் மற்றும் தாசளஞ்சிக ராமானுஜ பக்த ஜன சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மதியம் அபிஷேக பூஜை மற்றும் அன்னதானம் நடந்தது. புலவர் கணேசன் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்தினார். நாட்டிய பள்ளி மாணவியரின் நாட்டியம் நடந்தது.
நேற்று 108 தீர்த்த குடங்களுடன், நாராயணமூர்த்திக்கும், ஆஞ்சநேயருக்கும், அபிஷேகம் செய்யப்பட்டது.
குருக்கம்பாளையம் மாகாளியம்மன் குழுவின் பஜனை நடந்தது. மாலையில் சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நாராயணமூர்த்தி சேஷ வாகனத்தில் திருவீதி உலா வந்து அருள் பாலித்தார்.

