வெற்றிப்பள்ளிகள் திட்டத்தில் 1,069 மாணவர்கள் பயிற்சி
வெற்றிப்பள்ளிகள் திட்டத்தில் 1,069 மாணவர்கள் பயிற்சி
ADDED : செப் 15, 2026 06:02 PM
கோவை: அரசுப் பள்ளி மாணவர்களை உயர்கல்வி நுழைவுத் தேர்வுகளுக்கு தயார்படுத்த கடந்தாண்டு முதல், ‘வெற்றிப்பள்ளிகள்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
கோவை, பொள்ளாச்சி கல்வி மாவட்டங்களில் 8 அரசு மேல்நிலைப் பள்ளிகள், வெற்றிப்பள்ளிகள் மையங்களாக தேர்ந்தெடுப்பட்டு, அவற்றைச் சுற்றியுள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. பிளஸ் 2 மாணவர்களுடன், பிளஸ் 1 மாணவர்களும் விருப்பமான நுழைவுத் தேர்வுகளுக்கு பயிற்சி பெறுகின்றனர்.
2025–26ம் கல்வியாண்டில் 1,144 மாணவர்களும், நடப்பு கல்வியாண்டில் 1,069 மாணவர்களும் பயிற்சி பெறுகின்றனர்.
இதில் பிளஸ் 1ல் ஜே.இ.இ., 202, நீட், 225, கியூட், 73 பேரும், பிளஸ் 2ல் ஜே.இ.இ., 204, நீட், 226, கியூட், 139 பேரும் பயிற்சி பெறுகின்றனர்.
கடந்தாண்டை ஒப்பிடுகையில், ‘நடப்பு கல்வியாண்டில் ‘நீட்’ பயிற்சியில் சேரும் மாணவர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது. ஜூன் 5 முதல் பயிற்சி வகுப்புகள் நடக்கின்றன. நுழைவுத் தேர்வுகள் துவங்குவதற்கு முந்தைய வாரம் வரை பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
ஓய்வுபெற்ற மூத்த ஆசிரியர்கள், பாடவல்லுனர்கள், கல்லுாரி பேராசிரியர்கள் வாயிலாக, ஒவ்வொரு வாரமும் சனியன்று பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுவரை பதிவு செய்யாத மாணவர்களும், இனி பயிற்சி பெற விரும்பினால் தலைமையாசிரியரை அணுகி பங்கேற்கலாம்’ என பள்ளிக்கல்வித்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
