/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
108 ஆம்புலன்ஸ் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு
/
108 ஆம்புலன்ஸ் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு
108 ஆம்புலன்ஸ் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு
108 ஆம்புலன்ஸ் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு
ADDED : நவ 07, 2024 08:37 PM
கோவை; கோவை மாநகரில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் 108 ஆம்புலன்ஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த விழிப்புணர்வை பள்ளி நிர்வாகம் மற்றும் தீயணைப்பு துறையினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
இந்த விழிப்புணர்வின் போது மாணவர்களுக்கு, 108 ஆம்புலன்சை எப்போது அழைக்க வேண்டும், ஆம்புலன்சில் உள்ள வசதிகள் என்ன என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ஆம்புலன்ஸ் பைலட் சத்திய பிரகாஷ் கூறுகையில்,
ஒருவர் விபத்தில் சிக்கி கொண்டால் அவரை காப்பாற்ற 108 ஆம்புலன்சை எப்படி அழைக்க வேண்டும், சரியான இடத்தை எப்படி கூறுவது, அவர்களுக்கு தேவையான முதலுதவி சிகிச்சை குறித்து மாணவர்களுக்கு சொல்லி கொடுக்கப்படுகிறது. ஆம்புலன்சில் எழுப்பப்படும், 4 ஒலிகளின் வகைகள் என்ன, எதற்காக அந்த மறுப்பட்ட ஒலிகள் எழுப்பப்படுகிறது என்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்படுகிறது' என்றார்.