/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ராஜாமில் ரோட்டில் 12 சிறு பாலங்கள்; பூமி பூஜையுடன் பணி துவக்கம்
/
ராஜாமில் ரோட்டில் 12 சிறு பாலங்கள்; பூமி பூஜையுடன் பணி துவக்கம்
ராஜாமில் ரோட்டில் 12 சிறு பாலங்கள்; பூமி பூஜையுடன் பணி துவக்கம்
ராஜாமில் ரோட்டில் 12 சிறு பாலங்கள்; பூமி பூஜையுடன் பணி துவக்கம்
ADDED : ஜூலை 14, 2025 08:15 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி ராஜாமில்ரோட்டில், மூலதன மானிய நிதியில், வடிகால் மற்றும் சிறு பாலங்கள் அமைக்கும் பணிக்காக பூமி பூஜை நேற்று நடந்தது.
பொள்ளாச்சி ராஜாமில் ரோட்டில் மழைநீர் வடிகால் மற்றும் சிறு பாலங்கள் கட்ட அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. முதற்கட்டமாக, மழைநீர் வடிகால் மற்றும் சிறு பாலம் அமைப்பதற்கான பணிக்காக பூமி பூஜை நேற்று நடந்தது.
பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமி தலைமை வகித்தார். நகராட்சி தலைவர் சியாமளா, துணை தலைவர் கவுதமன், கமிஷனர் கணேசன் மற்றும் நகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர்.
அதிகாரிகள் கூறுகையில், 'ராஜாமில் ரோட்டில், மூலதன மானிய நிதி, (2025 -26ம் ஆண்டு) 29லட்சம் ரூபாய் செலவில், மொத்தம், 12 சிறு பாலங்கள், 120 மீட்டருக்கு வடிகால் வசதி ஏற்படுத்தப்படுகிறது.
இப்பணிகள் விரைவில் துவங்கப்படும். இதை தொடர்ந்து நகர்புற சாலை மேம்பாட்டு திட்டத்தில் ராஜாமில் ரோடு உள்ளிட்ட ஏழு ரோடுகள் புதுப்பிக்க, 99 லட்சம் ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும்,' என்றனர்.