/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கொங்கு நகரில் 12.5 சென்ட் ஆக்கிரமிப்பு இடம் மீட்பு
/
கொங்கு நகரில் 12.5 சென்ட் ஆக்கிரமிப்பு இடம் மீட்பு
கொங்கு நகரில் 12.5 சென்ட் ஆக்கிரமிப்பு இடம் மீட்பு
கொங்கு நகரில் 12.5 சென்ட் ஆக்கிரமிப்பு இடம் மீட்பு
ADDED : செப் 30, 2025 11:10 PM

கோவை; கோவை மாநகராட்சி, 62வது வார்டு, ராமநாதபுரம் அடுத்த கொங்கு நகர் உள்ளது.
இங்கு, 52 ஆண்டுகளுக்கு முன், கோவை நகராட்சியாக இருந்தபோது, ஸ்ரீ வெங்கடேஸ்வரா கூட்டுறவு வீடு கட்டும் சங்கம் சார்பில், சென்னை நகர ஊரமைப்புத்துறை அனுமதி பெற்று, 8.49 ஏக்கர் இடத்தில், 84 மனைகள் பிரிக்கப்பட்டன.
பொது ஒதுக்கீடான 39 சென்ட் இடம், 2024ம் ஆண்டு மே மாதம் மாநகராட்சி நகரமைப்பு துறையினரால் மீட்கப்பட்டது. மீதம், 12.5 சென்ட் இடம் மீட்கப்படாமல் இருந்தது.
மாநகராட்சி மத்திய மண்டல உதவி நகரமைப்பு அலுவலர் கோவிந்த பிரபாகர் தலைமையிலான அதிகாரிகள் போலீசாருடன் சென்று, ஆக்கிரமிப்பு கட்டடத்தை இடித்து ரூ.6 கோடி மதிப்பிலான, 12.5 சென்ட் இடத்தை மீட்டு, மாநகராட்சிக்கு சொந்தமான இடம் என்ற அறிவிப்பு பலகை நிறுவினர்.