/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சமுதாய வானொலியில் 13 மணி நேரம் தொடர் நேரலை சாதனை
/
சமுதாய வானொலியில் 13 மணி நேரம் தொடர் நேரலை சாதனை
ADDED : பிப் 14, 2024 02:04 AM

கோவை;80, 90 களின் பெரும்பாலான மக்களின், அபிமான பொழுதுபோக்கு மற்றும் தகவல் ஊடகமாக வானொலி இருந்தது.
தற்போது, சமூக ஊடகங்களின் பயன்பாடு அதிகரித்துவிட்ட போதும், வானொலி ஒலிபரப்பை கேட்பதற்கென, தனி ரசிகர் கூட்டம் இருக்கத்தான் செய்கின்றது. ஆண்டு தோறும் பிப்., 13ம் தேதி உலக வானொலி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.
பி.எஸ்.ஜி., சமுதாய வானொலியில், நேற்று காலை 5:00 முதல் மாலை 6:00 மணி வரை, 13 மணி நேரம் நேரலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
வானொலி நிலையத்தின் இயக்குனர் சந்திரசேகரன் கூறியதாவது:
2007ம் ஆண்டு துவங்கப்பட்ட, பி.எஸ்.ஜி.,சமுதாய வானொலியில், பொழுதுபோக்கு அம்சங்கள் இன்றி, சமுதாயம் சார்ந்த தகவல்கள், மக்கள் பயன்பெறும் தகவல்கள், விழிப்புணர்வு விஷயங்கள் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன.
'ரேடியோ ஹப்' என்ற பெயரில், இக்கல்லூரியில் படிக்கும் மாணவர்களை, சமுதாய வானொலியில் பங்களிப்பு செய்ய வைத்து வருகிறோம். ஊடகங்களில் பணியாற்ற விரும்பும் மாணவர்களுக்கு, சமுதாய வானொலி ஒரு அற்புத வாய்ப்பு. இவ்வறு, அவர் தெரிவித்தார்.

