/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காலமுறை சம்பளத்துக்கு 13 ஆண்டு காத்திருப்பு; 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் கொந்தளிப்பு

ADDED : ஜன 14, 2025 11:50 PM

கோவை ; 'தொகுப்பூதியம் ஒழிக்கப்பட்டு காலமுறை சம்பளம் வழங்கினால் மட்டுமே நல்ல முறையில் வாழமுடியும்' என, பகுதிநேர ஆசிரியர்கள் கொந்தளிக்கின்றனர்.
கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் அறிக்கை:
சட்டசபை கூட்ட தொடரில் முதல்வர் ஸ்டாலின் தி.மு.க., தேர்தல் வாக்குறுதி, 181ன்படி பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இதர கட்சியினரும் இதை வலியுறுத்திய நிலையில், ஏமாற்றம்தான் மிஞ்சியுள்ளது.
தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், பணிநிரந்தரம் செய்வதாக கூறிய முதல்வர் இதுவரை செய்யவில்லை.
தவிர, மே மாதம் சம்பளம், பொங்கல் போனஸ், மருத்துவ காப்பீடு, வருங்கால வைப்பு நிதி, இறந்தவர் குடும்பத்திற்கு நல நிதி உள்பட எதுவுமே இல்லை. 13 ஆண்டுகளாக வாழ்வாதாரம் மிகவும் பாதித்த நிலையில், பரிதவித்து நிற்கிறோம்.
தொகுப்பூதியம் ஒழிக்கப்பட்டு, காலமுறை சம்பளம் வழங்கப்பட்டால் மட்டுமே எஞ்சிய காலத்தை நல்லபடியாக வாழ முடியும்.
12 ஆயிரம் ஆசிரியர்களின் குடும்ப நலனையும், மாணவர்கள் கல்வி நலனையும் கருத்தில் கொண்டு, இந்த வேலையை முறைப்படுத்தி, நிரந்தரம் செய்து முதல்வர் ஆணையிட வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.