/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சூலுாரில் 14 கிலோ கஞ்சா பறிமுதல்; இருவர் கைது
/
சூலுாரில் 14 கிலோ கஞ்சா பறிமுதல்; இருவர் கைது
ADDED : அக் 09, 2024 12:11 AM

சூலுார் : சூலுார் பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதாக, சூலுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். சூலுார் அடுத்த நீலம்பூர் ஆச்சான் குளம் ரோட்டில், ரோந்து சென்று வாகன தணிக்கை செய்தனர்.
அப்போது, அவ்வழியே வந்த கர்நாடக மாநில பதிவெண் கொண்ட காரை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில், 14 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
காரில் வந்த தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த, கருப்ப தேவர் மகன் செல்வம்,45, கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த ராமச்சந்திரய்யா மகன் பிரதீப், 45 ஆகிய இருவரை, கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், இருவரும் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து, கோவை புற நகர் பகுதிகளில் விற்று வருவது தெரிந்தது. அவர்களிடம் இருந்து கார், இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.