/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
2 வீடுகளில் 16 பவுன் நகைகள் திருட்டு
/
2 வீடுகளில் 16 பவுன் நகைகள் திருட்டு
ADDED : செப் 27, 2025 12:48 AM
வடவள்ளி; வடவள்ளி பகுதியில், இரு வேறு இடங்களில், வீட்டின் கதவை உடைத்து, 16 பவுன் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
வடவள்ளி, மருதம் நகர், எம்.கே.எஸ். நகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ், 57. தனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று முன்தினம் காலை, அலுவலகத்திற்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பியுள்ளார். வீட்டின் கதவும், பீரோவும் உடைக்கப்பட்டு, 6 பவுன் நகைகள் திருடு போயிருந்தன. வடவள்ளி போலீசில் புகார் அளித்தார்.
மற்றொரு சம்பவம் மருதமலை, ஐ.ஓ.பி. காலனி, தக்ஷா வில்லாவை சேர்ந்தவர் ராபர்ட். வெளிநாட்டுக்கு சென்றுள்ளார். நேற்று காலை, இவரது வீட்டின் கதவை உடைக்கப்பட்டிருந்தது.
இதனைக்கண்ட உறவினர் ஒருவர், ராபர்ட்டுக்கு தகவல் தெரிவித்துள்ளார். உறவினர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். 10 பவுன் நகை மாயமாகியிருந்தது.
இவ்விரு சம்பவங்கள் குறித்தும், வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து, திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.