தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/18 பார்கள் சீல் வைப்பு

18 பார்கள் சீல் வைப்பு

18 பார்கள் சீல் வைப்பு


UPDATED : அக் 29, 2026 10:45 PM

ADDED : அக் 29, 2026 10:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 29, 2026 10:45 PM ADDED : அக் 29, 2026 10:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கோவையில் 118 எப்.எல்.2 பார்கள் உள்ளன. விசாலமான இடங்களில் பல வசதிகளுடன் இயங்கும் இந்த பார்கள் காலை 11 முதல் இரவு 11 வரை திறந்திருப்பதால் லெவண்டு-லெவன் பார் என குறிப்பிடுகின்றனர்.

ரெக்ரியேஷன் கிளப் என்ற பெயரில் இவை மது விற்க உரிமம் பெற்றுள்ளன. அதற்கான விதிமுறைகள் கடுமையானவை. கிளப் உறிப்பினர்களுக்கு மட்டும் தான் மது விற்க வேண்டும் என்பது ஒரு விதி.

விதிப்படி செயல்பட்டால் லாபம் கிடைக்காது என்பதால், அநேகமாக எல்லா 11டு11 பார்களும் பல விதிகளை மீறியே இயங்குகின்றன. சுத்தமாக பராமரிக்கப்படுவதாலும், வாகனங்கள் நிறுத்த தாராளமாக இடம் இருப்பதாலும் குடிமக்கள் யாரும் புகார் சொல்வது இல்லை. பாட்டிலுக்கு 30 ரூபாய் கூடுதலாக கேட்டாலும் சண்டை போடாமல் கொடுத்து செல்கிறார்கள்.

ஆனால், அதிகாரிகள் விடுவதில்லை. ”அவ்வப்போது” ஆய்வு செய்து மெமோ கொடுக்கின்றனர். பார் ஓனர்களும் சளைக்காமல் விளக்கம் கொடுக்கின்றனர்; அபராதம் செலுத்துகின்றனர். சில அதிகாரிகள் கறாராக செயல்படுகின்றனர்.

கிளப் உறுப்பினர் அல்லாதோருக்கு மது விற்பது, பதிவேடுகளை முறையாக பராமரிக்காதது, அனுமதிக்கப்பட்ட இடம் தவிர அதற்கு வெளியிலும் மது வினியோகிப்பது ஆகிய விதி மீறல்களை குறிப்பிட்டு கலால் கமிஷனருக்கு அறிக்கை அனுப்பினர். அவர் அதை பரிசீலித்து, 18 பாா்களை மூட உத்தரவிட்டார்.

அதன்படி மதுக்கரை, விளாங்குறிச்சி, பீளமேடு, பேரூர், சூலூர், கே.என்.ஜி. புதூர், நேரு நகர், கணபதி ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வந்த 18 எப்.எல்.2 பார்களை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

அவர்களிடம் கேட்டபோது, 'விதிமீறல்களின் தன்மைக்கு ஏற்ப 30 முதல் 90 நாட்கள் வரை பார்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. அதன் பிறகு திறக்கலாம். மீண்டும் விதிகளை மீறினால் நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுப்போம். எப்.எல்.3 நட்சத்திர பார்களையும் கண்காணிக்கிறோம்” என்றனர்.

மூடப்பட்ட பார்களின் நிர்வாகிகள் சிலரிடம் பேசியபோது, “தனியாக அல்லது 2, 3 பேராக வரும் வாடிக்கையாளர்களால் பிரச்னை வருவதில்லை. அமைதியாக குடித்து ஸ்நாக்ஸ் சாப்பிட்டு விட்டு போய்விடுவார்கள். நண்பர்கள் அல்லது ஆபீஸ் சகாக்கள் என்று 8 பேர், 10 பேராக வருபவர்களால் தான் பிரச்னை. கும்பலில் ஓரிருவர் ஓவராக குடித்து விட்டு கூச்சல் போடுவதும், அடங்க சொல்பவர்களை தாக்குவதும் போலீஸ் வரை சென்றுவிடுகிறது. ஸ்டார் ஓட்டல் பார்களில் உள்ளது போல நாங்களும் ரகளை செய்பவர்களை அடக்கி வெளியேற்ற பவுன்சர்களை நியமிக்கலாமா என்று யோசிக்கிறோம்” என்றனர்.

உறுப்பினர் அல்லாதவர்களுக்கு மது விற்பது பற்றி கேட்டதற்கு, “அது நடைமுறை சாத்தியம் இல்லாத விதிங்க. பெர்மிட் வாங்க 20 லட்சம் வரை செலுத்துகிறோம். அரசு நடத்தும் கடைகளுக்கு கொடுப்பதை விட அதிக விலைக்கு டாஸ்மாக் எங்களுக்கு மது தருகிறது. நாங்கள் கூடுதல் விலைக்கு விற்கவும் அனுமதி தந்துள்ளது. மொத்தமே 300 பேர் தான் உறுப்பினராக இருப்பார்கள். அவர்கள் மட்டும் குடித்தால் எங்கள் கதி என்னாவது?” என்றனர்.

அருகில் புட்டியுடன் அமர்ந்திருந்த ஒரு கஸ்டமர், “அவங்க விக்கிறாங்க; நாங்க வாங்குறோம். நடுவுல அரசுக்கு என்ன வேலை, ப்ரோ? டாஸ்மாக் கடையில எம்மார்ப்பிக்கு வாங்கி குடிக்கட்டுமே..?” என்று சீரியசாக கேட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us