/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'பகவத்கீதை உண்மையுருவில்' 18 நாட்கள் ஆன்லைன் வகுப்பு
/
'பகவத்கீதை உண்மையுருவில்' 18 நாட்கள் ஆன்லைன் வகுப்பு
'பகவத்கீதை உண்மையுருவில்' 18 நாட்கள் ஆன்லைன் வகுப்பு
'பகவத்கீதை உண்மையுருவில்' 18 நாட்கள் ஆன்லைன் வகுப்பு
ADDED : ஆக 20, 2025 09:47 PM
கோவை; 'பகவத் கீதை உண்மையுருவில்' ஆன்லைன் வகுப்பு, தொடர்ந்து 18 நாட்கள் நடக்கிறது. வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அழைப்பு விடப்பட்டுள்ளது.
கோவை 'இஸ்கான்' அமைப்பு, பகவத்கீதையில் கிருஷ்ணர் அருளிய ஞானத்தை தொடர்ந்து மக்களுக்கு அளிப்பதை குறிக்கோளாக கொண்டுள்ளது.
ஆன்லைன் 'பகவத் கீதை உண்மையுருவில்' வகுப்புகள், வரும் செப்., 8ம் தேதி துவங்கி 18 நாட்கள் நடக்கின்றன. இரவு 7:30 முதல் - 8:30 மணி வரை வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
வகுப்பில் பங்கேற்பவர்கள், பகவத் கீதையின் 18 அத்தியாயங்களை, 18 நாட்களில் இலவசமாக கற்றுக் கொள்ளலாம்.
'பவர்பாயின்ட் பிரசன்டேஷன்', நேரடி கேள்வி - பதில் என நடத்தப்படும் இந்த சான்றிதழ் வகுப்புகள், அனைத்து வயதினருக்கும் ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வகுப்புகளில் பங்கேற்க விரும்புபவர்கள், www.tamilgita.com எனும் இணையதளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.