ADDED : ஆக 28, 2026 01:00 PM
கோவை: கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் 18 இன்ஸ்பெக்டர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
காத்திருப்போர் பட்டியலில் இருந்த நவநீதகிருஷ்ணன், அவிநாசி சட்டம்–ஒழுங்கு இன்ஸ்பெக்டராகவும், வெங்கடேச பெருமாள், க.க.சாவடி இன்ஸ்பெக்டராகவும், சரவணன், பொள்ளாச்சி கிழக்கு இன்ஸ்பெக்டராகவும், செல்வராஜ், பேரூர் இன்ஸ்பெக்டராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பேரூர் இன்ஸ்பெக்டர் நசீர் கோமங்கலம் போலீஸ் ஸ்டேஷனுக்கும், கோமங்கலத்தில் பணியாற்றிய முருகராஜ், காரமடைக்கும் மாற்றப்பட்டுள்ளனர். காரமடை இன்ஸ்பெக்டர் முருகையன், நீலகிரி மாவட்டம் எருமாடு போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பொள்ளாச்சி தாலுகா இன்ஸ்பெக்டராக செல்வராஜ், ஊத்துக்குளி இன்ஸ்பெக்டராக இருந்த சரவணன் நீலகிரி கொலக்கொம்பை இன்ஸ்பெக்டராகவும், கொலக்கொம்பை இன்ஸ்பெக்டராக இருந்த பத்ரா, ஈரோடு வெள்ளோடு இன்ஸ்பெக்டராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
காத்திருப்போர் பட்டியலில் இருந்த சுகவனம் ஊத்துக்குளி இன்ஸ்பெக்டராகவும், சிவசங்கரி, நீலகிரி கேத்தி இன்ஸ்பெக்டராகவும், காளிதாஸ், அவிநாசி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவிநாசி குற்றப்பிரிவில் பணியாற்றிய முத்துமாரியம்மாள், அப்பர் குன்னுார் இன்ஸ்பெக்டராகவும், அங்கு பணியாற்றிய கதிர்வேல், கடம்பூர் இன்ஸ்பெக்டராகவும் மாற்றப்பட்டுள்ளனர். அவிநாசி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா, நீலகிரி ஆயுதபடைக்கும், அங்கு பணியில் இருந்த சரண்யா உதகை போக்குவரத்து இன்ஸ்பெக்டராகவும், குருசாமி என்பவர் அவிநாசி போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷனுக்கும் மாற்றப்பட்டுள்ளனர் எனகோவை டி.ஐ.ஜி சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
