/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மர்ம விலங்கு தாக்கி 18 ஆடுகள் பலி
/
மர்ம விலங்கு தாக்கி 18 ஆடுகள் பலி
ADDED : மார் 31, 2025 07:35 AM

அன்னுார்; மர்ம விலங்கு தாக்கியதில், கோவை அருகே, 18 ஆடுகள் பரிதாபமாக இறந்தன.
கோவை மாவட்டம், அன்னுார் மேட்டுப்பாளையம் சாலை செட்டித்தோட்டத்தில் விவசாயி ஒருவர் ஆட்டுப்பண்ணை அமைத்து, 20 வெள்ளாடுகளை வளர்த்து வந்தார்.
நேற்று காலை 8:30 மணிக்கு கொட்டகைக்கு சென்று பார்த்தபோது, 18 ஆடுகள் கழுத்தில் கடிக்கப்பட்டு இறந்து கிடந்தன. இரண்டு ஆடுகளை காணவில்லை. மூன்று ஆடுகளின் தலைப்பகுதியையும் காணவில்லை. இது குறித்து காவல்துறை, வருவாய் துறை மற்றும் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
சிறுமுகை வனக்காப்பாளர் மற்றும் ஊழியர்கள் ஆட்டுக் கொட்டகை பகுதியில் கால்தடங்களை ஆய்வு செய்தனர். 'எந்த விலங்கு தாக்கியது என்பது முழுமையான ஆய்வுக்கு பிறகே தெரிய வரும்' என்றனர்.
போலீசார் கூறுகையில், 'சாலையில் இருந்து தோட்டத்துக்கு செல்லும் வழியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம்' என்றனர். மர்ம விலங்கு தாக்குதலால் அருகில் உள்ள பகுதியில், ஆடு வளர்ப்போர் அச்சமடைந்துள்ளனர்.