/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஏ.ஐ., சகாப்தம் நோக்கிய மாறுதல் : சி.ஐ.ஐ., சார்பில் 2 நாள் கருத்தரங்கு
/
ஏ.ஐ., சகாப்தம் நோக்கிய மாறுதல் : சி.ஐ.ஐ., சார்பில் 2 நாள் கருத்தரங்கு
ஏ.ஐ., சகாப்தம் நோக்கிய மாறுதல் : சி.ஐ.ஐ., சார்பில் 2 நாள் கருத்தரங்கு
ஏ.ஐ., சகாப்தம் நோக்கிய மாறுதல் : சி.ஐ.ஐ., சார்பில் 2 நாள் கருத்தரங்கு
ADDED : அக் 16, 2025 05:49 AM
கோவை: இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.,) சார்பில், 'சி.ஐ.ஐ., தமிழ்நாடு கனெக்ட்' இன்றும் நாளையும், கோவையில் நடக்கிறது.
சி.ஐ.ஐ., தொழில்நுட்ப பிரிவு கன்வீனர் அருணா தங்கராஜ், ஜி.சி.சி., டாஸ்க்போர்ஸ் கோவை கன்வீனர் மகாலிங்கம் ராமசாமி ஆகியோர் கூறியதாவது:
சி.ஐ.ஐ., சார்பில் ஆண்டுதோறும், கோவை கனெக்ட் நிகழ்வு நடைபெறும். தமிழ்நாடு பிரிவு சார்பில் சென்னையில் நடைபெறும். இம்முறை, இரண்டையும் ஒருங்கிணைந்து, கோவையில் தமிழ்நாடு கனெக்ட் என, இரண்டு நாள் நிகழ்வு நடக்கிறது.
'ஏ.ஐ.,: நுண்ணறிவின் புதிய சகாப்தத்தை நோக்கிய மாறுதல்' என்ற தலைப்பில், இந்த இரு நாள் நிகழ்வு திட்டமிடப்பட்டுள்ளது.
சிறு, நடுத்தர, பெரு நிறுவனங்களில் ஏ.ஐ., தொழில்நுட்பத்தின் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை இம்மாநாடு விவாதிக்கும்.
அமேசான், கூகுள், இன்போசிஸ், பாஷ் என உலகின் முன்னணி நிறுவனங்களில் இருந்து உயர்நிலை அளவிலான தலைவர்கள் பங்கேற்கின்றனர். மேனேஜ்மென்ட் குரு, ராம் சரண் உள்ளிட்டோர் பேசுகின்றனர்.
உள்ளூர் நிறுவனங்கள், புதிய தொழில்நுட்பங்களின் போக்கை அறிந்து கொள்ளவும், எதிர்காலத்தைக் கணிக்கவும், இக்கருத்தரங்கு உதவியாக இருக்கும்.
தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் தியாகராஜன், மத்திய மாநில ஐ.டி., துறை செயலர்கள் பங்கேற்கின்றனர். அரசின் முக்கிய துறைகள் பங்கேற்கின்றன. சிறந்த நிறுவனங்களுக்கு விருதுகளும் வழங்கப்பட உள்ளன. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர் .