/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேளாண் பல்கலை வளாகத்தில் தேனீ வளர்க்க 2 நாள் பயிற்சி
/
வேளாண் பல்கலை வளாகத்தில் தேனீ வளர்க்க 2 நாள் பயிற்சி
வேளாண் பல்கலை வளாகத்தில் தேனீ வளர்க்க 2 நாள் பயிற்சி
வேளாண் பல்கலை வளாகத்தில் தேனீ வளர்க்க 2 நாள் பயிற்சி
ADDED : டிச 04, 2024 10:26 PM
கோவை; கோவை வேளாண் பல்கலை வளாகத்தில், தேசிய தேனீ வாரியம் சார்பில் மாநில அளவிலான தேனீ வளர்ப்பு பயிற்சி, இரண்டு நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
இன்றும் நாளையும், பல்கலை வளாகத்தில் உள்ள அண்ணா அரங்கில் நடைபெறும் பயிற்சியில் தேனீ இனங்களைக் கண்டறிந்து வளர்த்தல், பெட்டிகளில் தேனீ வளர்க்கும் முறை மற்றும் நிர்வாகம், தேனீக்கு உணவு தரும் பயிர்கள் மற்றும் மகரந்த சேர்க்கை வாயிலாக மகசூல் அதிகரிக்கும் பயிர்களின் விவரம், தேனைப் பிரித்தெடுத்தல், தேனீக்களின் இயற்கை எதிரிகள் மற்றும் நோய் நிர்வாகம் ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர், பயிற்சியின் முதல் நாளில், காலை 9:00 மணிக்கு, ஏதேனும் ஓர் அடையாள அட்டை நகலைச் சமர்ப்பித்து, பதிவு செய்து கொள்ளலாம்.
பயிற்சியின் நிறைவில் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு, 0422-6611214 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.