/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
2 லட்சம் லிட்டர் நீர்தேக்க தொட்டி; மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது
/
2 லட்சம் லிட்டர் நீர்தேக்க தொட்டி; மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது
2 லட்சம் லிட்டர் நீர்தேக்க தொட்டி; மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது
2 லட்சம் லிட்டர் நீர்தேக்க தொட்டி; மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது
ADDED : டிச 01, 2024 11:45 PM
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையத்தில் நகராட்சி சார்பில், ரூ.42 லட்சம் மதிப்பீட்டில் 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நிலத்தடி நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டது. இத்தொட்டி மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.
மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதிகளுக்கு பவானி ஆற்றின் அருகே சாமன்னா நீர் ஏற்று நிலையம் வாயிலாக தண்ணீர் எடுத்து சுத்திகரிப்பு செய்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனிடையே அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் விநியோகம் செய்யும் போது, சில பகுதிகளில் குடிநீர் வரும் அளவு குறைந்து காணப்பட்டது. மேலும், கோடை காலங்களில் தண்ணீர் பற்றாக்குறையும் ஏற்பட்டது.
இதையடுத்து, மேட்டுப்பாளையம் நகராட்சி சார்பில் 27வது வார்டு அருண் நகரில், ரூ.42 லட்சம் மதிப்பீட்டில், 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நிலத்தடி நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. இதன் வாயிலாக குடிநீர் விநியோகம் சீராக செய்யப்படும். கோடை காலங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனை, நேற்று நீலகிரி எம்.பி. ராஜா, மேட்டுப்பாளையம் நகராட்சி தலைவர் மெஹரிபா பர்வின் ஆகியோர் துவங்கி வைத்தனர்.