/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குண்டர் தடுப்பு சட்டத்தில் 2 பேர் கைது
/
குண்டர் தடுப்பு சட்டத்தில் 2 பேர் கைது
ADDED : மார் 07, 2024 11:34 AM
மேட்டுப்பாளையம்;கோவை மாவட்டம் காரமடையில் சட்டத்திற்கு விரோதமாக கலப்பட மதுபானம் தயார் செய்து விற்பனைக்கு வைத்திருந்த கேரளாவை சேர்ந்த பிஜூ, 48 மற்றும் வினயன், 54, ஆகியோரை கடந்த ஜனவரி மாதம் பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த குற்ற செயலில் ஈடுபட்ட இருவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ரூரல் எஸ்.பி.,பத்ரிநாராயணன், கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமாருக்கு பரிந்துரை செய்தார்.
இதன் பேரில் பிஜூ மற்றும் வினயன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி அவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.---

