/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
20 ஆயிரம் வாழை மரங்கள் சுழற்காற்றால் முறிந்து சேதம்
/
20 ஆயிரம் வாழை மரங்கள் சுழற்காற்றால் முறிந்து சேதம்
20 ஆயிரம் வாழை மரங்கள் சுழற்காற்றால் முறிந்து சேதம்
20 ஆயிரம் வாழை மரங்கள் சுழற்காற்றால் முறிந்து சேதம்
ADDED : மார் 20, 2026 04:58 AM

அன்னுார்: அன்னுார் வட்டாரத்தில் வீசிய சுழற்காற்றில், 20 ஆயிரம் வாழைகள், காய்கறி பயிர்கள் சேதமடைந்தன.
அன்னுார் வட்டாரத்தில், ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பில், நேந்திரன் பயிரிடப்பட்டுள்ளது. இத்துடன் பல நுாறு ஏக்கரில் தக்காளி, வெண்டை, கத்தரி உட்பட காய்கறி பயிர்களும் பயிரிடப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம் இரவு, அன்னுார் வடக்கு பகுதியில், ஆலங்கட்டி மழையுடன் காற்றும் சுழன்று வீசியது. இதில், கணுவக்கரை, ஆம்போதி, அக்கரை செங்கப்பள்ளி ஆகிய ஊராட்சிகளில், 15க்கும் மேற்பட்ட கிராமங்களில், 100 ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் இருந்த நேந்திரன் வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. தக்காளி, வெண்டை, கத்திரி உட்பட காய்கறி பயிர்களும் சேதமடைந்தன.
விவசாயி நரேஷ் கூறுகையில், ''வாழை மரங்களுக்கு வேலி அமைத்திருந்தும், காற்றின் வேகம் தாங்காமல் முறிந்து விழுந்தன. பிஞ்சு தார்களாக இருப்பதால், வாங்க முடியாது என வியாபாரிகள் திரும்பி சென்று விட்டனர். இதை அகற்றவே, பல ஆயிரம் செலவாகும்,'' என்றார்.
கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் வேணுகோபால், ஆம்போதியில் பாதிக்கப்பட்ட தோட்டங்களில் விவசாயிகளை சந்தித்து கூறுகையில், ''பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பயிர் கடனை அரசு ரத்து செய்ய வேண்டும். இழப்பீடு வழங்க வேண்டும். அரசே பயிர் காப்பீட்டுக்கு பொறுப்பேற்க வேண்டும்,'' என்றார்.
பாதிக்கப்பட்ட தோட்டங்களில், வி.ஏ.ஓ., பிரபு ஆய்வு செய்தார். தோட்டக்கலை மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்து, உரிய இழப்பீடு பெற்றுத்தர வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

