ADDED : செப் 15, 2026 03:52 PM
கோவை: கொங்கு மண்டலத்தில் நேற்று முன்தினம் மாலை வெப்ப சலன மழை பதிவானது. கோவை நகர் மற்றும் சுற்றுப்பகுதியில் கன மழை பெய்தது. சிறுவாணியில் 22 மி.மீ. அடிவாரத்தில் 19 மி.மீ., பெய்தது. குடிநீர் தேவைக்கு 5.97 கோடி லிட்டர் எடுக்கப்பட்டது. நேற்றைய நிலவரப்படி, 29.22 அடிக்கு அணையில் நீர் இருப்பு இருக்கிறது.
இதர பகுதியில் பெய்த மழை அளவு:
பீளமேடு – 11, வேளாண் பல்கலை – 16.60, பெ.நா.பாளையம் – 16.80, மேட்டுப்பாளையம் – 12, பில்லுார் அணை – 11, அன்னுார் – 12, கோவை தெற்கு தாலுகா – 15, சூலுார் – 16, தொண்டாமுத்துார் – 18, மதுக்கரை தாலுகா – 19.30, போத்தனுார் – 12.60, பொள்ளாச்சி – 8,கிணத்துக்கடவு – 6.30, சின்கோனா – 82, சின்னக்கல்லார் – 68, வால்பாறை – 43, சோலையாறு – 55 மி.மீ. பதிவானது. இன்னும் சில நாட்களுக்கு வெப்ப சலன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக, வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
