/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
226 கி.மீ. நீளம் சாலை மேம்பாடு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு
/
226 கி.மீ. நீளம் சாலை மேம்பாடு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு
226 கி.மீ. நீளம் சாலை மேம்பாடு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு
226 கி.மீ. நீளம் சாலை மேம்பாடு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு
ADDED : செப் 14, 2025 01:39 AM
கோவை:கோவை மாநகராட்சி பகுதிகளில் தார் ரோடு, 24 மணி நேர குடிநீர் திட்டம் உள்ளிட்ட வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மண் சாலை மற்றும் பழுதடைந்த சாலைகளை புதுப்பிக்க முதல்வர் ஸ்டாலின் ரூ.200 கோடி ஒதுக்கியுள்ளார்.
அதன்படி, 3,456 ரோடுகள், 503.67 கி.மீ., சாலைகள் புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. முதற்கட்டமாக, 1,937 ரோடுகள், 277.13 கி.மீ., நீளத்துக்கு சாலை மேம்பாட்டு பணிகள் முடிந்துள்ளன.
மேலும், 1,519 ரோடுகள், 226.54 கி.மீ., நீளத்துக்கு சாலை பணிகள் நடந்து வருகின்றன. பணிகளின் தரம் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
நான்கு ஆண்டுகளில் தமிழ்நாடு நகர்ப்புற சாலை உட்கட்டமைப்பு திட்டம், நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டம், மாநில நிதிக்குழு சிறப்பு நிதி வாயிலாக, 5,215 ரோடுகள், 860.69 கி.மீ., நீளத்துக்கு ரூ.415 கோடிக்கு சாலை பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாக, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.