sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 18, 2025 ,புரட்டாசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வீடுகளுக்கு 24 மணி நேரம் குடிநீர் சப்ளை; இறுதி கட்டத்தில் சூயஸ் திட்டம்

/

வீடுகளுக்கு 24 மணி நேரம் குடிநீர் சப்ளை; இறுதி கட்டத்தில் சூயஸ் திட்டம்

வீடுகளுக்கு 24 மணி நேரம் குடிநீர் சப்ளை; இறுதி கட்டத்தில் சூயஸ் திட்டம்

வீடுகளுக்கு 24 மணி நேரம் குடிநீர் சப்ளை; இறுதி கட்டத்தில் சூயஸ் திட்டம்

2


ADDED : செப் 17, 2025 11:48 PM

Google News

ADDED : செப் 17, 2025 11:48 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட, 60 வார்டுகளில், 24 மணி நேர குடிநீர் திட்ட பணிகள், 90 சதவீதம் முடிந்துள்ளன. இந்தாண்டு டிச. மாதத்துக்குள் முழுமையாக முடிக்கும் வகையில் பணிகள் துரிதப் படுத்தப்பட்டு உள்ளன.

கோவை மாநகராட்சி பகுதியில், 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் விதமாக ரூ.3,167 கோடியில் சூயஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. 60 வார்டுகளில், 1.50 லட்சம் குடியிருப்புகளுக்கு இணைப்பு வழங்கப்படுகிறது.

ஒப்பந்தப்படி, நான்கு ஆண்டுகளில் பணிகளை முடித்திருக்க வேண்டும். ஆனால், கொரோனா காரணமாக இந்தாண்டு ஜன., வரை நீட்டித்து, அவகாசம் வழங்கப்பட்டது. இருப்பினும் பணிகள் ஆமை வேகத்தில் நடந்ததால், மக்களிடம் அதிருப்தி நிலவியது.

1.35 லட்சம் இணைப்புகள் இத்திட்டத்தில், சாய்பாபா காலனி அருகே பாரதி பார்க் மேல்நிலை தொட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் ரோடு வழியாக ராம் நகர், செம்மொழி பூங்கா, வ.உ.சி., பார்க் தண்ணீர் செல்லும் வகையில், இணைப்பு வழங்கப்படுகிறது.

அங்கிருந்து, ஆடிஸ் வீதி வழியாக கலெக்டர் அலுவலகம் எதிரே சென்று லங்கா கார்னரில் பிரதான குழாய் இரண்டாக பிரிகிறது.

ஒரு இணைப்பு டவுன்ஹாலுக்கும், மற்றொன்று திருச்சி ரோடு வழியாக, அல்வெர்னியா பள்ளி எதிரேயும் முடிவடைகிறது. அங்கு, ஒரு வால்வு அமைக்கப்படுகிறது.

இதுவரை, 1.35 லட்சம் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. பிரதான குழாய், பகிர்மான குழாய் பதிக்கும் பணி வேகப்படுத்தப்பட்டுள்ளதால், டிச., மாதத்துக்குள் திட்டத்தை முடிக்கும் வகையில், பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

90 சதவீதம் நிறைவு மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறியதாவது:

இந்தாண்டு டிச., மாதத்துக்குள், 24 மணிநேர குடிநீர் திட்ட பணிகள் முழுமையாக முடிக்கப்படும். வீடுகளுக்கு வழங்க வேண்டிய, 1.5 லட்சம் இணைப்புகளில், 90 சத வீதம் வழங்கப்பட்டு விட்டன. மாநகராட்சி பகுதிகளில் ஏற்கனவே, 33 நீர்த்தேக்க தொட்டிகள் உள்ளன.

இத்திட்டத் தில் புதிதாக, 35 தொட்டிகள் இடம் பெறுகின்றன. நான்கு தொட்டிகள் மட்டுமே கட்டி முடிக்க வேண்டியுள்ளது. இறுதி கட்டத்தில் உள்ள இப்பணிகள், டிச.,க்குள் முடிக்கப்படும். மெயின் ரோடுகளில் பிரதான குழாய் பதிக்கும் பணியும், பெரும்பாலும் முடிந்து விட்டது. சில இடங்களில், 10 மீ., 20 மீ.,க்கு மட்டுமே முடிக்க வேண்டியுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

'இன்னும் 15 கி.மீ. மட்டுமே பாக்கி'


24 மணி நேர குடிநீர் திட்ட மேலாண்மை ஆலோசகர் குழு தலைவர் கோபாலகிருஷ்ணனிடம் கேட்டபோது, ''பகிர்மானம், பிரதானம் என, 1,970 கி.மீ.,க்கு குழாய் பதிக்கப்படுகிறது. இதில், இன்னும் 15 கி.மீ.,க்கு மட்டுமே, பணிகளை முடிக்க வேண்டியுள்ளது. வடகோவை மேம்பாலத்தின் கீழ் பகுதி, நஞ்சப்பா ரோடு, செம்மொழி பூங்கா எதிரே, தண்டுமாரியம்மன் கோவில் எதிரே, லங்கா கார்னர், சுங்கம் இணைப்பு ஆகிய பகுதிகளில் மட்டுமே, குழாய் பதிக்க வேண்டியுள்ளது. இப்பணிகள் விரைந்து முடிக்கப்படும்,'' என்றார்.








      Dinamalar
      Follow us