/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
24 புதிய தாழ்தள சொகுசு பஸ்கள் இயக்கம் துவக்கம்
/
24 புதிய தாழ்தள சொகுசு பஸ்கள் இயக்கம் துவக்கம்
ADDED : அக் 25, 2024 10:01 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கருமத்தம்பட்டி: கருமத்தம்பட்டியில் அரசு சொகுசு பஸ்கள் இயக்கத்தை மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.
கருமத்தம்பட்டி அரசு போக்குவரத்து டிப்போவில், புதிய அரசு பஸ்கள் இயக்க துவக்க விழா நேற்று நடந்தது. 24 தாழ்தள சொகுசு பஸ்கள் இயக்கத்தை மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார். கலெக்டர் கிராந்தி குமார், மாநாகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.