தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கோவையில் 248 உணவகங்களுக்கு ஐந்து நட்சத்திர அந்தஸ்து

 கோவையில் 248 உணவகங்களுக்கு ஐந்து நட்சத்திர அந்தஸ்து

 கோவையில் 248 உணவகங்களுக்கு ஐந்து நட்சத்திர அந்தஸ்து


ADDED : ஜூலை 07, 2026 06:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 07, 2026 06:39 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: சுகாதாரமான முறையில் உணவு தயாரித்தல், விற்றல், வளாகத்தை துாய்மையாக வைத்து கொள்வது உள்ளிட்டவற்றிற்காக, மத்திய அரசின் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., சார்பில், 248 உணவகங்களுக்கு ஐந்து நட்சத்திர அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.,) சார்பில், உணவகங்கள், ஓட்டல்கள், பேக்கரிகளில், தரமான உணவுப்பொருட்கள் தயாரித்தல், விற்றல், சுகாதாரமாக வளாகத்தை பராமரித்தல் ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில், 2020ல் இருந்து, நட்சத்திர அந்தஸ்து வழங்கப்படுகிறது.

இதில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மட்டுமல்லாமல், அங்கீகரிக்கப்பட்ட மூன்றாம் தரப்பு தணிக்கை நிறுவனங்கள் ஆய்வு செய்து மதிப்பெண்கள் வழங்கும்.

சமையலறை வடிவமைப்பு மற்றும் வசதிகள், உணவுப்பொருட்கள் சேமிக்கும் முறை, உணவு தயாரிப்பு, பேக்கிங், உணவு தயாரிக்கும் பொருட்களின் பராமரிப்பு, கழிவுகள், குப்பை மேலாண்மை, உணவு சமைப்பவர்கள் முறையாக தலைகவசம், கையுறை போட்டுள்ளனரா உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்து, 100 புள்ளிகள் வழங்கப்படுகின்றன. இதனடிப்படையில், ஸ்டார் அந்தஸ்து வழங்கி, சான்றிதழ் வழங்கப்படுகிறது.

கோவை மாவட்டத்தில் கடந்தாண்டு, 500க்கும் மேற்பட்ட உணவகங்களில் ஆய்வு செய்ததில், 248 உணவகங்கள் ஐந்து நட்சத்திர அந்தஸ்தும், 139 நிறுவனங்களுக்கு நான்கு நட்சத்திர அந்தஸ்தும் வழங்கப்பட்டது. இந்த சான்றிதழை பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்துவதோடு, தங்களின் விளம்பரங்களில் பயன்படுத்தி கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரி அனுராதா கூறுகையில்,'' தனியார் உணவகங்கள் மட்டுமல்லாமல், அரசு கட்டடங்களில் செயல்படும் அங்கன்வாடிகள், பள்ளி சத்துணவு கூடங்களிலும் ஆய்வு செய்யப்படுகிறது. இந்தாண்டு, 200 உணவகங்களில் ஸ்டார் அந்தஸ்துக்கு ஆய்வு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

ஸ்டார் அந்தஸ்து எப்படி?

உணவு தயாரிக்கும் நிறுவனத்திற்கு நட்சத்திர அந்தஸ்து வழங்கப்படுகிறது. மொத்தம் 100 புள்ளிகள் வழங்கப்படும். இதில், 81-100 புள்ளிகளுக்கு மேல் பெற்றால், ஐந்து நட்சத்திர அந்தஸ்தும், 61-80 புள்ளிகளுக்கு நான்கு நட்சத்திரம், 41-60 புள்ளிகளுக்கு மூன்று நட்சத்திரம், 21-40 புள்ளிகளுக்கு இரு நட்சத்திரம், 20 புள்ளிகளுக்கு கீழ் பெற்றால், ஒரு நட்சத்திரம் வழங்கப்படும். இந்த நட்சத்திர அந்தஸ்து தேவைப்படும் நிறுவனங்கள், எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., இணையதளத்தில் (hygiene.fssai.gov.in) விண்ணப்பிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us