/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
25 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
/
25 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
ADDED : செப் 19, 2024 10:09 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆனைமலை: ஆனைமலை அருகே, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்து இருந்தவரை, போலீசார் கைது செய்தனர்.
ஆனைமலை பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என, ஆனைமலை போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, சுள்ளிமேட்டு பகுதியில் பெட்டிக்கடை நடத்தும் ஜான்,40, என்பவர், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைத்திருப்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், 25 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.