/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசின் 'முதல்வர் மருந்தகம்' திட்டத்தில் 25 பேருக்கு உரிமம்
/
அரசின் 'முதல்வர் மருந்தகம்' திட்டத்தில் 25 பேருக்கு உரிமம்
அரசின் 'முதல்வர் மருந்தகம்' திட்டத்தில் 25 பேருக்கு உரிமம்
அரசின் 'முதல்வர் மருந்தகம்' திட்டத்தில் 25 பேருக்கு உரிமம்
ADDED : ஜன 12, 2025 11:29 PM
கோவை; தமிழக அரசின் முதல்வர் மருந்தக திட்டத்தின் கீழ், 25 பேருக்கு கோவை மண்டல மருந்து தரக்கட்டுப்பாட்டு துறையின் கீழ், உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு சார்பில், 2024 ஆக., மாதம் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் தரமான மருந்து கிடைக்கும் நோக்கில், மாநிலம் முழுவதும் 1000 முதல்வர் மருந்தகம் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
பி-பார்ம், டி-பார்ம் சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலின் பேரில், கூட்டுறவு சங்கம் அல்லது தனிநபர் முதல்வர் மருந்தகம் துவக்கலாம்.
இதற்கு அரசு, 3 லட்சம் ரூபாய் மானியம் ரொக்கமாகவும், மருந்துகளாகவும் வழங்கப்படுகிறது. மருந்தகம் அமைக்க, 110 சதுர அடியில் இடம் சொந்தமாகவோ, வாடகை ஒப்பந்தம் அடிப்படையிலோ இருக்க வேண்டும்.
இம்மருந்தகம் அமைப்பதற்கான உரிமம், மருந்து தரக்கட்டுப்பாடு அலுவலம் சார்பில் வழங்கப்படுகிறது.
கோவை மண்டல மருந்து கட்டுப்பாடு உதவி இயக்குனர் மாரிமுத்து கூறுகையில், ''கோவையில், கூட்டுறவு சங்கம் 25 மற்றும் தனிநபர் 3 பேர் உட்பட, 25 பேருக்கு முதல்வர் மருந்தகம் திறக்க உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த மருந்தகம் துவக்க, சில கட்டுப்பாடுகள் உள்ளன. அருகில் வேறு பிற மருந்தகங்கள் இருக்ககக்கூடாது, குறிப்பிட்ட இடவசதி உள்ளிட்ட அனைத்தும் ஆய்வு செய்து உரிமம் வழங்குகிறோம்.
''6 விண்ணப்பங்களுக்கு உரிமம் வழங்க, ஆய்வு பணிகள் நடக்கின்றன; 2 விண்ணப்பங்கள் புதிதாக ஆய்வுக்கு எங்களிடம் வந்துள்ளன,'' என்றார்.