/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இயற்கையை ரசிக்க டாப்சிலிப்க்கு கோடையில் 25 ஆயிரம் பேர் வருகை
/
இயற்கையை ரசிக்க டாப்சிலிப்க்கு கோடையில் 25 ஆயிரம் பேர் வருகை
இயற்கையை ரசிக்க டாப்சிலிப்க்கு கோடையில் 25 ஆயிரம் பேர் வருகை
இயற்கையை ரசிக்க டாப்சிலிப்க்கு கோடையில் 25 ஆயிரம் பேர் வருகை
ADDED : மே 29, 2025 11:36 PM
பொள்ளாச்சி, ;கோடை விடுமுறையில், 25 ஆயிரம் சுற்றுலாப் பயணியர், டாப்சிலிப் வந்து சென்றுள்ளதாக, வனத்துறையினர் தெரிவித்தனர்.
ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி வனக்கோட்டத்திற்கு உட்பட்டு பொள்ளாச்சி, டாப்சிலிப் (உலாந்தி), வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய 4 வனச்சரகங்கள் உள்ளன. இதில், பொள்ளாச்சி வனச்சரகத்துக்குட்பட்ட ஆழியார் அருகே உள்ள கவியருவி, டாப்சிலிப் வனச்சரகம், வால்பாறை உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா பயணியர், அதிகம் வந்து செல்கின்றனர்.
குறிப்பாக, டாப்சிலிப் வரும் சுற்றுலா பயணியர், வாகன சவாரி வாயிலாக வனத்தின் பசுமையையும், வனவிலங்குகளையும் கண்டுகளிக்க ஆர்வம் காட்டுகின்றனர். சிலர், அங்குள்ள வனத்துறைக்கு சொந்தமான விடுதிகளில் தங்கி, இயற்கையை ரசித்து செல்கின்றனர். அவ்வகையில், கோடை விடுமுறையொட்டி, 25 ஆயிரம் சுற்றுலா பயணியர் டாப்சிலிப் வந்து சென்றுள்ளனர்.
வனத்துறையினர் கூறியதாவது:
டாப்சிலிப்பில் யானை சவாரி மேற்கொள்ளப்படுவதில்லை. வாகன சவாரி மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. கோடை விடுமுறையில் டாப்சிலிப்க்கு சுற்றுலா பயணியர் அதிகளவில் வந்துள்ளனர்.
அவர்கள், ஆர்வத்துடனும், மகிழ்ச்சியுடனும் வாகன சவாரி மேற்கொண்டனர். தங்கும் விடுதிகளை பொறுத்தமட்டில், ஆன்லைனின் முன்பதிவு செய்து கொண்டதால், அனைத்து நாட்களிலும் சுற்றுலா பயணியர் வந்தனர். டாப்சிலிப் வாயிலாக, பரம்பிக்குளம் பகுதிக்கு சுற்றுலா பயணியர் அதிகளவில் சென்று திரும்பியுள்ளனர்.
இவ்வாறு, கூறினர்.