/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாமில் 278 பேர் பயன்
/
மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாமில் 278 பேர் பயன்
மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாமில் 278 பேர் பயன்
மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாமில் 278 பேர் பயன்
ADDED : அக் 19, 2024 11:21 PM
கோவை: மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாமில், 278 பேர் பயனடைந்தனர்.
ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம், டாடாபாத் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடந்தது.
காலை, 9:30 முதல் மதியம், 2:00 மணி வரை நடந்த முகாமில், 278 மாற்றுத்திறன் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இதில், 64 மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. உதவி உபகரணங்கள் தேவையான, 38 பயனாளிகளின் பெயர், அளவீடுகள் பதிவு செய்யப்பட்டன. 42 குழந்தைகளுக்கு காப்பீடு பதிவு செய்யப்பட்டது.
மாநகராட்சி கல்வி அலுவலர் குணசேகரன், மாவட்ட உதவி திட்ட அலுவலர் இளமுருகன் உள்ளிட்டோர், முகாமை பார்வையிட்டனர்.