தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஆர்.வி.எஸ்.நர்சிங் கல்லுாரியில் 29வது பட்டமளிப்பு விழா

ஆர்.வி.எஸ்.நர்சிங் கல்லுாரியில் 29வது பட்டமளிப்பு விழா

ஆர்.வி.எஸ்.நர்சிங் கல்லுாரியில் 29வது பட்டமளிப்பு விழா


ADDED : ஆக 30, 2026 04:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 30, 2026 04:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சூலுார்: சூலுார் ஆர்.வி.எஸ். செவிலியர் கல்லுாரியில் 29வது பட்டமளிப்பு விழா நடந்தது.  ஆர்.வி.எஸ்.கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் செந்தில் கணேஷ் தலைமை வகித்தார்.

பி.எஸ்.ஜி.சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இயக்குனர் டாக்டர் புவனேஸ்வரன், 110 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசுகையில், ‘‘பட்டம் பெறும்போது தொழில் புரியத் தகுதி பெற்றிருப்பீர்கள். ஆனால், திறம்படச் செயல்பட, நீங்கள் உணர்வுசார் நுண்ணறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். உணர்வுசார் நுண்ணறிவு என்பது சுய விழிப்புணர்வு, சுயக் கட்டுப்பாடு, சுய ஊக்கம், பிறர் உணர்வைப் புரிந்துகொள்ளும் திறன் மற்றும் சமூக மற்றும் மென் திறன்களை உள்ளடக்கியது, ’’ என்றார்.

ஆர்.வி.எஸ். கல்வி நிறுவனங்களின் தாளாளர்  ஸ்ரீ வித்யா லட்சுமி, கல்லுாரி செயலர் சாரம்மாள், முதல்வர் பிராங்கிளின், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us