/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
2ம் வகுப்பு மாணவிக்கு பிரம்படி: அரசு பள்ளி ஆசிரியை மீது வழக்கு
/
2ம் வகுப்பு மாணவிக்கு பிரம்படி: அரசு பள்ளி ஆசிரியை மீது வழக்கு
2ம் வகுப்பு மாணவிக்கு பிரம்படி: அரசு பள்ளி ஆசிரியை மீது வழக்கு
2ம் வகுப்பு மாணவிக்கு பிரம்படி: அரசு பள்ளி ஆசிரியை மீது வழக்கு
ADDED : நவ 27, 2025 02:34 AM
கருமத்தம்பட்டி: கருமத்தம்பட்டி அருகே, 2 ம் வகுப்பு மாணவியை பிரம்பால் அடித்த, அரசு பள்ளி ஆசிரியை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
கருமத்தம்பட்டி அடுத்த எலச்சிபாளையத்தை சேர்ந்தவர் ஸ்ரீ ராம்,43. மனைவி பரிமளா,34. இருவரும் விசைத்தறி தொழிலாளிகள். 12 வயது, 9 வயதில் இரு மகன்களும், ஏழு வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். பெண் குழந்தை அதே ஊரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில், இரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த, 7ம் தேதி மதியம், சக மாணவிகளுடன் அந்த மாணவி பள்ளியில் விளையாடி உள்ளார்.
அதை பார்த்த ஆசிரியை பெரிய நாயகி, அந்த மாணவியை பிரம்பால், இடது கை முட்டிக்கு கீழ் அடித்துள்ளார்.
இதனால், ரத்தக் கட்டு ஏற்பட்டு மாணவி அவதிப்பட்டுள்ளார். பெற்றோர் இதுகுறித்து ஆசிரியையிடம் முறையிட்டனர்
மருத்துவ செலவை தான் கொடுத்து விடுவதாக உறுதி அளித்ததால், மாணவி அவிநாசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்து பெற்றோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மருத்துவ செலவு தொகையை ஆசிரியை கொடுத்துவிட்டதால், வழக்கு வேண்டாம், என, அவர்கள் கூறினர்.
இந்நிலையில், கடந்த, 21 ம்தேதி மாணவிக்கு வலி ஏற்பட்டதால், கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தங்களது குழந்தையை அடித்த ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என, பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.
சூலூர் கோர்ட்டில் அனுமதி பெற்ற போலீசார், அடித்து காயம் ஏற்படுத்துதல் பிரிவின் கீழ் ஆசிரியை மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

