ADDED : ஜூன் 22, 2026 09:47 PM
அ நிறம் | அளவு
கோவை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் 2026 -27ம் கல்வியாண்டுக்கான இளங்கலை மாணவர் சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 5 முதல் 11ம் தேதி வரை நடந்தது. கல்லுாரியில் மொத்தம் 1,727 இடங்கள் உள்ள நிலையில், 1,594 மாணவர்கள் இதுவரை சேர்க்கை பெற்றுள்ளனர்.
பல்வேறு பாடப்பிரிவுகள் மற்றும் சமூகப் பிரிவுகளில் காலியாகவுள்ள 133 இடங்களை நிரப்புவதற்காக, இரண்டாம் கட்ட கலந்தாய்வு இன்று காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.
230 மற்றும் அதற்கு மேற்பட்ட 'கட்- ஆப்' மதிப்பெண் பெற்ற மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கலாம். வணிகவியல், அரசியல் அறிவியல், பொருளாதாரம், பொது நிர்வாகம் உள்ளிட்ட கலைப் பாடங்களிலும், சில அறிவியல் பாடப்பிரிவுகளிலும் குறைந்த எண்ணிக்கையிலான இடங்கள் காலியாக உள்ளதாக கல்லுாரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
