UPDATED : அக் 02, 2026 12:00 AM
ADDED : அக் 01, 2026 07:26 PM
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில், 32 ஆயிரத்து 175 மரக்கன்றுகள் வனத்துறை சார்பில் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க தாயர் நிலையில் உள்ளது.
கோவை மாவட்ட விவசாயிகள், தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கும் வகையில், மேட்டுப்பாளையம் சமூக காடுகள் சரகத்தின், நாற்றுப் பண்ணையில் தயார் நிலையில் உள்ளது.
இங்கு, பசுமை தமிழ்நாடு இயக்கம் மற்றும் தமிழ்நாடு உயிர் பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டத்தின் கீழ், வேம்பு, புங்கன், நாவல், புளி, கொடுக்காப்புளி, நெல்லி, பூவரசு, மகாகனி, மந்தாரை, நீர் மருது, மகிழம், இலுப்பை, பாதாம், புன்னை மரம், வாகை, போன்ற மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. ஆர்வம் உள்ள விவசாயிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் 9751596229, 9361274184, 9698417897, 97904 69664 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மேட்டுப்பாளையம் சமூக காடுகள் வனச்சரகர் மைனா தெரிவித்தார்.
