ADDED : அக் 18, 2024 10:49 PM
போத்தனூர்: மதுக்கரை பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், 330 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது; மூவர் பிடிபட்டனர்.
மதுக்கரை போலீசார் ராஜேஸ்வரி நகர் அருகேயுள்ள பெட்டிக் கடையில் சோதனை செய்தனர். ஹான்ஸ், கூல் லிப், விமல் உள்ளிட்ட புகையிலை பொருட்கள், 550 கிராம் இருப்பது தெரிந்தது. கடை உரிமையாளரான கேரள மாநிலம், கோழிக்கோட்டை சேர்ந்த அப்துல்லா, 63 கைது செய்யப்பட்டார்.
நேற்று முன்தினம் எஸ்.ஐ., பாண்டியராஜன், பாலக்காடு மெயின் ரோடு, திருமலையாம்பாளையம் பிரிவிலுள்ள ஒரு வீட்டில் சோதனை செய்தார். ஹான்ஸ், கூல் லிப், விமல், ஸ்வாகத் உள்ளிட்டவை, 120 கி.கிராம் இருப்பது தெரிந்தது.
பறிமுதல் செய்த போலீசார், கேரளாவை சேர்ந்த நூர்முஹமது, 41 என்பவரை கைது செய்தனர். சீரபாளையம், கரிசல்காடு, கணேஷ் நகரில் நடந்த சோதனையில் 209. 5 கி.கி., புகையிலை பொருட்கள் சிக்கியது. கிருஷ்ணகிரியை சேர்ந்த முருகன், 40 கைது செய்யப்பட்டார்

