/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் பணியில் 3,500 ஆசிரியர்கள்

ADDED : மே 04, 2025 12:50 AM
கோவை: கோவை மாவட்டத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் பணியில், 3,500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கோவை மாவட்டத்தில், 1,210 அரசு பள்ளிகள், 177 அரசு உதவி பெறும் பள்ளிகள் செயல்படுகின்றன. ஊராட்சி ஒன்றிய துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், அரசு நடுநிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக, மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) ரவிச்சந்திரன் கூறியதாவது:
அங்கன்வாடி மையங்களில் முன்பருவக் கல்வியை முடித்த, 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை, அருகிலுள்ள அரசுப் பள்ளிகளில் சேர்க்க, அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் படிப்பை தொடர்வதற்கு, வீடு வீடாகச் சென்று, 'கேன்வாசிங்' செய்யும் பணியில், 3,500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அரசு பள்ளிகளில் வழங்கப்படும் சேவை, நலத்திட்டங்கள் மற்றும் உதவித்தொகை திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை, மக்களிடம் நேரில் விளக்கி, மாணவர் சேர்க்கையை ஊக்குவித்து வருகின்றனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.