sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கோவை புறநகரில் 37 குழந்தை திருமணங்கள் நிறுத்தம் 24 மணி நேரமும் புகார் செய்யலாம்

/

கோவை புறநகரில் 37 குழந்தை திருமணங்கள் நிறுத்தம் 24 மணி நேரமும் புகார் செய்யலாம்

கோவை புறநகரில் 37 குழந்தை திருமணங்கள் நிறுத்தம் 24 மணி நேரமும் புகார் செய்யலாம்

கோவை புறநகரில் 37 குழந்தை திருமணங்கள் நிறுத்தம் 24 மணி நேரமும் புகார் செய்யலாம்


ADDED : ஏப் 18, 2025 11:29 PM

Google News

ADDED : ஏப் 18, 2025 11:29 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம்: கோவை புறநகரில் 37 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

குழந்தை திருமணம் தடுத்தல் குறித்த பல்வேறு நடவடிக்கைகளை, கோவை மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மேற்கொண்டு வருகிறது. குழந்தை திருமணத்தை தூண்டும் நபர்களையும், காரணமான நபர்களையும் கண்டறிந்து, அவர்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

பெண்ணுக்கு, 18 வயதும் ஆண்களுக்கு, 21 வயதும் நிறைவேறாத நிலையில், செய்யப்படும் திருமணம், குழந்தை திருமணம் எனப்படுகிறது. குழந்தை திருமணத்தால் பல்வேறு விளைவுகள் ஏற்படுகின்றன. திருமணம் ஆனவுடன் கருவுறுதல், கருச்சிதைவு மற்றும் கருக்கலைப்பு ஆகியவை அடிக்கடி ஏற்படுவதால், சத்து குறைபாடு அதிகமாக ஏற்படுகிறது. அப்படியே கரு சிதைவு ஏற்படாமல் பிரசவித்தாலும் தாய், சேய் மரணம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

மரணம் ஏற்படாத நிலையில், குழந்தைகள் எடை குறைவாகவும், உடல், மன குறைபாடு உள்ள குழந்தையாகவும் பிறக்க வாய்ப்பு உண்டு.

இது குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'குழந்தை திருமணம் குறித்து கலெக்டர், மாவட்ட நீதிபதி, குழந்தை திருமண தடுப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், போலீஸ் துறை, குழந்தைகள் நல குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், வி.ஏ.ஓ., அந்தந்த பஞ்சாயத்து தலைவர், பள்ளி தலைமை ஆசிரியர், ஒன்றிய கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு, சைல்ட் ஹெல்ப் லைன், 1098 தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

தகவல் தெரிவிப்பவர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும். 18 வயதுக்கு குறைந்த பெண் குழந்தையை திருமணம் செய்து கொண்ட, 18 வயதுக்கு மேற்பட்ட வாலிபர், இளைஞர் குற்றவாளி ஆவார்.

குழந்தை திருமணத்தை நடக்க செய்தவர், நடத்த தூண்டியவர், நெறிப்படுத்தியவர், நடத்தியவர் இவர்கள் அனைவருமே குற்றவாளிகள்.

இக்குற்றம் புரிந்தவர்களுக்கு, இரண்டு ஆண்டு ஜெயில் தண்டனை அல்லது ஒரு லட்ச ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கலாம் என, குழந்தை திருமண தடுப்புச் சட்டம் கூறுகிறது' என்றார்.

சமூக நலத்துறையினர் கூறுகையில்,' கடந்த ஆண்டு, 37 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. பெரியநாயக்கன்பாளையம், காரமடை வட்டாரங்களில் தலா, 15 குழந்தை திருமணங்கள் கடந்த ஆண்டு நடந்துள்ளன.

குழந்தை திருமணங்கள் தொடர்பாக அந்தந்த பகுதி போலீஸ் ஸ்டேஷன்களில் சமூக நலத்துறை சார்பில் புகார் செய்யப்பட்டு, வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.

குற்ற செயல்களுக்கு உறுதுணையாக இருக்கும் நபர்கள் அனைவருக்கும் சட்டத்தின்படி தண்டனை பெற்றுத் தர முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன' என்றனர்.






      Dinamalar
      Follow us