ADDED : டிச 29, 2025 05:36 AM
சோமனூர்: சோமனூர், கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் நித்தீஷ், 22, இவர் தனது தந்தையின் நிறுவனத்தில் வேலை செய்யும் தொழிலாளியை, அவரது வீட்டுக்கு அழைத்து சென்று விட்டு தனது வீட்டுக்கு திரும்பினார்.
பூளைக்காடு பகுதியில் பைக்கில் சென்றபோது, அவரை வழிமறித்த நான்கு பேர், தகாத வார்த்தை பேசி தாக்கி, அவரது செல்போனை பறித்து தப்பினர். காயமடைந்த நிதீஷ், கருமத்தம்பட்டி போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
அதில், கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த அய்யப்பன், 22, தொட்டிபாளையம் சந்தோஷ்குமார், 26, சாமளாபுரம் சுனில் குமார், 19 மற்றும் ஒரு சிறுவன் ஆகிய நான்கு பேரும் சேர்ந்து செல்போன் பறித்து தெரிந்தது.
அவர்களை கைது செய்த போலீசார், செல்போன் மற்றும் மூன்று இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

