
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : மே தினத்தை முன்னிட்டு போலீசார் நடத்திய சோதனையில், மது விற்பனையில் ஈடுபட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்து, 912 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.மே தினத்தை முன்னிட்டு கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளிலும், மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். அதில், சிங்காநல்லுார், ஆர்.எஸ்.புரம், போத்தனுார், பீளமேடு பகுதிகளில் டாஸ்மாக் பார்களில் மது விற்பனையில் ஈடுபட்டது தெரிந்தது. இதையடுத்து மது விற்பனையில் ஈடுபட்ட, மதிபாலன், 23, ரங்கராஜ், 35, விஜய், 25, விக்னேஷ், 29 ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து, 912 மதுபாட்டில்கள், ரூ.1.28 லட்சம் ரொக்கம், மொபைல்போன், பைக் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.