வெள்ளலூர் குப்பை கிடங்கு: மாநகராட்சிக்கு 4 வார கெடு
வெள்ளலூர் குப்பை கிடங்கு: மாநகராட்சிக்கு 4 வார கெடு
UPDATED : செப் 08, 2026 07:21 PM
ADDED : செப் 08, 2026 07:11 PM
கோவை:மாநகரில் சேரிக்கப்படும் குப்பை வெள்ளலூரில் கொட்டப்படுகிறது. 150 ஏக்கர் பரப்பில் மலை போல் குப்பை குவிந்துள்ளது.
தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் மாசு தடுப்பு கூட்டுக்குழு செயலர் மோகன் வழக்கு தொடர்ந்தார். அது விசாரணைக்கு வந்தபோது, மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மையில் திருப்தி இல்லை . வெள்ளலூரில் 36 நுண் உர மையத்தில் 10 மட்டுமே செயல்படுகிறது. 17 ஆழ்துளைக் கிணறுகளில் செய்த ஆய்வில் நீரின் தரம் மோசமாக உள்ளது. 7.5 லட்சம் டன் பழைய குப்பை அகற்றவில்லை என மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் அறிக்கை அளித்துள்ளது. புதிதாக கொட்டிய 9 லட்சம் டன் குப்பையை பயோ மைனிங் செய்யவில்லை. குப்பை கிடங்கில் அடிக்கடி ஏன் தீ பிடிக்கிறது?” என கேட்ட தீர்ப்பாயம், 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மாநகராட்சிக்கு உத்தரவிட்டது.
