/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
4 சக்கர வாகனங்களில் மருதமலை செல்ல அனுமதி இல்லை
/
4 சக்கர வாகனங்களில் மருதமலை செல்ல அனுமதி இல்லை
ADDED : அக் 12, 2024 11:27 PM
கோவை : 'இன்று மட்டும் நான்கு சக்கர வாகனங்களில் மருதமலை கோவிலுக்குச் செல்ல அனுமதி இல்லை' என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
முருகனின் ஏழாம் படை வீடாக கருதப்படுவது கோவை மருதமலையில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோவில். கோவை மட்டுமின்றி பல்வேறு மாவட்ட மக்களும் இங்கு வருகின்றனர். விடுமுறை நாட்களில் பக்தர்கள் வருகை அதிகளவில் உள்ளதால், மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை கருத்தில் கொண்டு, கோவிலுக்கு வரும் வாகனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகளவு பக்தர்கள் வருவர் என எதிர்பார்ப்பதால், நான்கு சக்கர வாகனங்களில் பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை. அதேநேரம் இரு சக்கர வாகனங்கள் மற்றும் மலைப்படிகள் வழியாக, கோவில் பஸ் மற்றும் கோவில் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பஸ்கள் வாயிலாக கோவிலுக்குச் செல்லலாம் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.