தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சத்தி ரோட்டில் 40 வயது அரச மரம் மறுநடவு

 சத்தி ரோட்டில் 40 வயது அரச மரம் மறுநடவு

 சத்தி ரோட்டில் 40 வயது அரச மரம் மறுநடவு


ADDED : ஜூன் 14, 2026 09:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 14, 2026 09:20 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: கோவை - சத்தி ரோட்டில் காபி கடை பஸ் ஸ்டாப் பகுதியில், 40 வயதான அரச மரம் வேரோடு பெயர்த்தெடுக்கப்பட்டு, மறுநடவு செய்யப்பட்டது.

கோவையில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் ரோடு மிகவும் குறுகலாக இருக்கிறது. சரவணம்பட்டியில் இருந்து கரட்டுமேடு வரை நான்கு வழிச்சாலை, குரும்பபாளையத்தில் இருந்து புளியம்பட்டி வரை, 7 மீட்டரில் இருந்து 10 மீட்டராக அகலப்படுத்தப்படுகிறது. 70 கோடி ரூபாய் ஒதுக்கி, தேசிய நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. இப்பணி வேகமாக நடந்து வருகிறது.

இவ்வழித்தடத்தில் 621 மரங்களை வெட்ட அனுமதி கேட்டனர். மாவட்ட பசுமை கமிட்டியினர் ஆய்வு செய்து, 54 மரங்களை வேரோடு பெயர்த்தெடுத்து, மறுநடவு செய்ய அறிவுறுத்தினர்.

இதுவரை, 42 மரங்கள் மறுநடவு செய்யப்பட்டன. காபி கடை பஸ் ஸ்டாப் பகுதியில் சாலை விரிவாக்கத்துக்கு இடையூறாக இருந்த 40 வயதான அரச மரம் நேற்று பெயர்த்தெடுக்கப்பட்டு, ரோட்டின் ஓரத்தில் மறுநடவு செய்யப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us