/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சூறாவளி காற்றில் 40 ஆயிரம் வாழை மரங்கள் முறிந்து நாசம்
/
சூறாவளி காற்றில் 40 ஆயிரம் வாழை மரங்கள் முறிந்து நாசம்
சூறாவளி காற்றில் 40 ஆயிரம் வாழை மரங்கள் முறிந்து நாசம்
சூறாவளி காற்றில் 40 ஆயிரம் வாழை மரங்கள் முறிந்து நாசம்
ADDED : மே 18, 2025 04:27 AM

அன்னூர்: அன்னூர் தாலுகாவில் வீசிய சூறாவளி காற்றில், 40 ஆயிரம் வாழை மரங்கள் முறிந்து விழுந்து நாசமாகின.
அன்னூர் தாலுகாவில், நேற்று முன்தினம் மாலையில் கன மழை பெய்தது. மழையுடன் காற்றும் சுழன்று சுழன்று அடித்தது. இதில் கணேசபுரம், எல்லப்பாளையம், சுக்ரமணி கவுண்டன் புதூர், கதவுகரை உள்ளிட்ட பகுதிகளில் 40 ஆயிரம் வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. தோட்டக்கலைத் துறை அதிகாரிகள், கோவை வடக்கு ஆர்.டி.ஓ., கோவிந்தன், தாசில்தார் யமுனா மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
உழவர் விவாத குழு அமைப்பாளர் ரங்கசாமி கூறுகையில், குவிண்டால் ரக வாழைக்கு, ஒரு ஏக்கருக்கு ஒன்றரை லட்சம் ரூபாயும், செவ்வாழைக்கு ஒரு ஏக்கருக்கு இரண்டு லட்சம் ரூபாயும் செலவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில், அறுவடை செய்யும் நிலையில் இருந்தன. இதை அப்புறப்படுத்த ஒரு ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் செலவாகும். அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், என்றார்.
எல்லப்பாளையம் காலனியில் 25 வீடுகளின் கூரை ஓடுகள் சேதமடைந்தன. அதிகாரிகள், பாதிக்கப்பட்ட வீடுகள், மரங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.