ADDED : நவ 22, 2026 06:37 PM
அ நிறம் | அளவு
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், எதிர்கட்சி தலைவர் உதயநிதி பிறந்தநாளையொட்டி ரத்த தான முகாம் நடந்தது.
கோவை தெற்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி சார்பில், எதிர்கட்சி தலைவர் உதயநிதி பிறந்தநாளையொட்டி ரத்த தான முகாம், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் நடந்தது.
மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மணிமாறன் முகாமுக்கு தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., நித்தியானந்தன், முகாமினை துவக்கி வைத்தார். மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணை செயலாளர் ஆறுச்சாமி, ரத்ததானம் வழங்கியோருக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
நகர பொறுப்பாளர்கள் அமுதபாரதி, நவநீதகிருஷ்ணன், நகராட்சி துணைத்தலைவர் கவுதமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞரணி துணை அமைப்பாளர் பாலமுருகன் நன்றி கூறினார். முகாமில் மொத்தம், 41 பேர் ரத்த தானம் செய்தனர்.
