தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ குப்பை சேகரிக்க 43 பேட்டரி வாகனம்

குப்பை சேகரிக்க 43 பேட்டரி வாகனம்

குப்பை சேகரிக்க 43 பேட்டரி வாகனம்


ADDED : செப் 19, 2026 02:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 19, 2026 02:41 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: மாநகர பகுதிகளில் குப்பை சேகரிக்க, 43 புதிய பேட்டரி வாகனங்களை அமைச்சர் சம்பத்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். தனியார் நிறுவனத்தின் சி.எஸ்.ஆர். நிதியில் இவ்வாகனங்கள் மாநகராட்சிக்கு வழங்கப்பட்டன.

ஒரு வாகனத்தின் மதிப்பு ரூ.2 லட்சம். ஒருமுறை சார்ஜ் செய்தால் 80 முதல் 100 கி.மீ. இயங்கும். 500 கிலோ எடையை கையாளும்.

ஒவ்வொரு வாகனத்திலும் தினசரி 250 வீடுகளில் குப்பை சேகரிக்கப்படும். இவ்வாகனங்களில் ஈரக்கழிவு, உலர் கழிவு, சுகாதார கழிவு, சிறப்பு கவன கழிவு என நான்கு வகையாக பிரிக்கப்படும்.

முன்னதாக, தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி முகாமையும் சம்பத்குமார் துவங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சிங்காநல்லூர் எம்.எல்.ஏ., கிரிபிரசாத், கலெக்டர் பவன்குமார், கமிஷனர் ரவி தேஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us