/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
45வது சகோதயா வருடாந்திர தடகளம்
/
45வது சகோதயா வருடாந்திர தடகளம்
ADDED : டிச 01, 2024 11:10 PM

கோவை; ஸ்ரீ சக்தி சர்வதேச பள்ளி மற்றும் ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி சார்பில், 45வது சகோதயா வருடாந்திர தடகள சந்திப்பு நடந்தது.
கோவை சகோதயா பள்ளிகள் மற்றும் கோவை மாவட்ட தடகள சங்கத்துடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த போட்டியை, 1980 மாஸ்கோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்ல வழிவகுத்த இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன்வாசுதேவன் பாஸ்கரன் துவக்கி வைத்தார்.
113 பள்ளிகளை சேர்ந்த 3 ஆயிரத்து 100 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.
12, 14, 17 மற்றும் 19 வயதிற்குட்பட்டவர்கள் பிரிவுகளில், ஓட்டம், தொடர் ஓட்டம், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
மூன்று நாள் போட்டியின் நிறைவு விழாவில், வெற்றி பெற்ற வீரர்களை, சக்தி கல்வி நிறுவனங்களின் தலைவர் தங்கவேலு பாராட்டினார்.