/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முனீஸ்வர சுவாமி கோவிலில் 49ம் ஆண்டு திருவிழா
/
முனீஸ்வர சுவாமி கோவிலில் 49ம் ஆண்டு திருவிழா
ADDED : டிச 27, 2025 06:28 AM
வால்பாறை: காஞ்சமலை எஸ்டேட் முனீஸ்வர சுவாமி கோவிலின், 49ம் ஆண்டு திருவிழா கடந்த, 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 18ம் தேதி காளீஸ்வரி அம்மன் கோவில் திருவிழாவும் கொடியேற்றத்துடன் துவங்கியது.
நேற்று முன்தினம் சக்தி விநாயர் கோவிலில் சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடந்தன. தொடர்ந்து பகல், 12:00 மணிக்கு முனீஸ்வர சுவாமிக்கு உச்சி கால பூஜையும், மாலை, 6:00 மணிக்கு காளீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன. இரவு, 8:00 மணிக்கு ஆற்றிலிருந்து சக்தி கும்ப ஊர்வலம் கோவிலுக்கு சென்றது.
நேற்று காலை, 6:30 மணிக்கு அம்மனுக்கு பால், நெய் அபிேஷகம் செய்யப்பட்டது. 9:30 மணிக்கு பொங்கல் வைத்தும், பால்குடம், முளைப்பாரி எடுத்தும் பக்தர்கள் ஊர்வலாக கோவிலுக்கு சென்றனர். அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. மதியம், 1:00 மணிக்கு அன்னதானம் வழங்கபட்டது.

