/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கல்லுாரி மாணவரை மிரட்டி நகை பறித்த 5 பேர் கைது
/
கல்லுாரி மாணவரை மிரட்டி நகை பறித்த 5 பேர் கைது
ADDED : டிச 23, 2024 05:02 AM

சூலூர் : சூலுார் அருகே கல்லுாரி மாணவரை மிரட்டி, நகை மற்றும் பணம் பறித்த நான்கு பேருடன், திருட்டு நகையை வாங்கியவரையும் போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், புகலூரை சேர்ந்தவர் ஜீவன்ராஜ்,21. நீலம்பூரில் தங்கி, அரசூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.இ., படித்து வருகிறார். கடந்த, 3ம் தேதி இரவு நீலம்பூரில் உள்ள தனது அறைக்கு நடந்து சென்றார். அப்போது, ஆம்னி காரில் வந்த நான்கு பேர், ஜீவன் ராஜை மிரட்டி பணம் கேட்டனர். அவர் மறுக்கவே, அவரை தாக்கி, இரண்டரை சவரன் செயின் மற்றும் 500 ரூபாய் பணத்தை பறித்து தப்பினர். இதுகுறித்து மாணவர் சூலூர் போலீசில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், சி.சி.டி.வி., காட்சி பதிவுகள் அடிப்படையில் நகை பறித்த நபர்களை அடையாளம் கண்டனர்.
நகை பறித்த, ராவத்தூர் பிரிவை சேர்ந்த முருகன், 40, ஊத்துப்பாளையத்தை சேர்ந்த பிரபாகரன், 23, அத்திக்குட்டையை சேர்ந்த ரபிகர்,20, முதலிபாளையத்தை சேர்ந்த சரத்குமார்,24 ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர். இவர்களிடம் நகை வாங்கிய நரசிம்ம நாயக்கன் பாளையத்தை சேர்நத முத்துமாரி, 43 என்பவரை கைது செய்து நகையை பறிமுதல் செய்தனர்.
கைதானவர்கள் மீது வேறு வழக்குகள் உள்ளனவா என, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

